கொப்பிரைட்டிங் Copywriting - விளம்பர மாயாஜாலம்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி பிராண்ட் ரெடி. அதை விளம்பரப்படுத்த தேவையான கருத்து உத்தியும் ரெடி. இனி விளம்பரத்தை உருவாக்குவதுதான் பாக்கி. கூப்பிடுவோம் “விஸ்வநாதன் ராம மூர்த்தியை” ஆம் ஒரு விளம்பரத்தை உருவாக்கத் தேவை இரட்டையர்கள். Copywriter மற்றும் Art Director. விளம்பரத்துக்கான மையக்கருவையும், கதையையும், வசனத்தையும் எழுதுபவர் Copywriter. வசனகர்த்தா என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கதையை அழகாக வடிவமைத்து, டிசைன் செய்பவர் Art Director. கலை இயக்குனர். அதாவது விஸ்வநாதனின் ட்யூன்களுக்கு இசை சேர்க்கும் ராமமூர்த்தியைப் போல. ஒரு விளம்பரத்தை உருவாக்குவதில் இவர்கள் இருவரின் பங்களிப்பே பிரதானம். இவர்கள் இருவரும் இணைந்து, பிணைந்து பணியாற்றியால்தான் சிறந்த விளம்பரங்களை உருவாக்க முடியும். அதற்காக வசனகர்த்தாதான் கதையை உருவாக்குபவர். கலை இயக்குனர்தான் டிசைன் செய்பவர் என்ற விதியெல்லாம் ஏதும் இல்லை. பல சமயங்களில் விளம்பரத்துக்கான கருவையோ, கதையையோ கலை இயக்குனர் கொடுக்கலாம். அதை வைத்துக்கொண்டு வசனகர்த்தா அந்தக் கதைக்கு மெருகூட்டலாம். அதேப...
Posts
Showing posts from 2015